Thursday, April 24, 2008

பேறு கிடைக்க!!!

கண்கள் கசக்கி கடல் மழைக்கொட்ட
காட்டு அருவி வெள்ள மென
கிணற்று தவளை தத்தி தவள
கீற்று கொட்டைகையில் இளம் வண்டுகள்
குட்டி தூக்கம் நான்கு சந்துகளில்
கூடி மக்கள் கைத்தட்டி சிரிக்கையில்
கெட்டு அழியும் செல்வ சோம்பேறிகள்
கேட்காமல் கிடைக்கும் நரகம்
கை தட்டி யமனை அழைக்க
கொன்று குவியும் பிணகுவியல்கள்
கோட்ப்பாட்டில் வாழும் மனங்கள்
கெளதம புத்தரின் போதனையே கடைப்பிடித்து
அஃதே வாழ்ந்தால் பேறு பல கிடைக்கும்..
__________________

கேட்டதும் கிடைத்தது.!!

வி எழுத மூங்கிலே கேட்டேன்
அதோ என் குழலை எடு என்றது...
காற்றை கேட்டேன்
அதுதொடும் வானே கேழ் என்றது...
மிச்சமின்றி என் காதலே கேட்டேன்
நான் பாடும் சொற்களே
கவிதான் என்று சொல்லியது..
சுதந்திர வானில் ஒரு நிமிடம்
வாழ பறக்க குருவியே கேட்டேன்
என்னாலும் உயர முடியும் என்றது..
இதோ நான் தேடும் தமிழே கேட்டேன்
அதுவோ எடுத்துக்கொள்
என்உயிரை தருகிறேன் என்றது..
__________________

களவு(திருட்டு)

கற்றவை
களவுபெற்றது
புகழுமேன்மை
எவ்வளவுநாளை
என்றும் இன்றே
செய்தால்கிடைப்பது
அரிதே!!